பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்த குழப்பமும் வேண்டாம் எனவும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முதல்வர் அனைத்து துறையினருடன் இணைந்து முடிவுசெய்த பின்னர் தான் தேர்வு சம்பந்தமான அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மூன்று நாட்கள் விடுதிகளை திறப்பதற்கும் மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

12,864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாகவும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.






