மதுரை ஆதீன பீடாதிபதியாக பொறுப்பேற்றதாக நித்யானந்தா அறிவிப்பு..!
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்று விட்டதாக நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மதுரை ஆதீன மடத்தில் 292 பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரிநாதர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி காலமானார் . தற்போது மற்றொருவர் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்று மற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை புகைப்படம் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






