--- --:--:-- --

கேரள தங்க கடத்தல் வழக்கில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை..!

4

கேரள தங்க கடத்தல் வழக்கில அம்மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை அரசு செயலர் சிவசங்கர்னிடம் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் பத்தரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.

 

கேரளாவில் புயலை கிளப்பி இருக்கும் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்திப் நாயர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர்களுடன் அம்மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை அரசு செயலர் சிவசங்கரனுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஏற்கனவே இரண்டு முறை கொச்சியில் உள்ள என்‌ஐ‌ஏ அலுவலகத்திற்கு அழைத்து சிவசங்கரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் மூன்றாவது கட்டமாக பத்தரை மணி நேரத்திற்கும் மேலாக தங்கக் கடத்தல் குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் துருவித்துருவி கேட்டுள்ளனர்.

 

மூன்றாம் கட்ட விசாரணை நிறைவடைந்ததையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு சிவசங்கரன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சரித்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை நீதிமன்றத்தில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon