சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரின் காதலியும், நடிகையுமான ரியா மீது வழக்குப்பதிவு..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் அவரது காதலி என கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த்தின் தந்தை அளித்த புகாரின் ரியா சக்கரவர்த்தி மீது பீகார் மாநிலம் பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுஷாந்த்தின் தற்கொலை வழக்கில் அவரது நண்பர்கள், திரைத் துறையினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ரியா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுஷாந்த் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வரும் நிலையில் வழக்கின் முக்கிய ஆவணங்களை அவர்களிடம் பெற்று விசாரணையை தீவிரப்படுத்த பீகார் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






