பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு இ பதிவு அவசியம் இல்லை..!
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் பத்திரிகை, ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இ -பதிவு அவசியமில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகன தணிக்கை இடங்களில் அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் டிஜிபி திரிபாதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் இ-பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



