79 அடுக்குகள் கொண்ட மாடி கட்டிடம் திடீரென அசைந்ததால் மக்கள் பீதி..!
சீனாவில் 79 அடுக்குகள் கொண்ட மாடி கட்டிடம் திடீரென அசைந்ததால் மக்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். சென்ஷன் என்ற இடத்தில் 980 அடி உயரத்திலிருந்து 79 மாடி கட்டிடம் ஒன்று கடந்த 2000மாவது ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தில் ஏராளமான மின்னணு சந்தை மற்றும் ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் மொத்த கட்டடமும் அசைந்ததால் இசிஜி பிளாசாவில் பணியாற்றிய ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏதும் உணரப்படாத நிலையில் கட்டிடம் அசைந்ததற்கு காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.




