--- --:--:-- --

நண்பர்கள் தொல்லையால் ஆம்புலன்சில் புதுமண தம்பதி ஊர்வலம்..!

12

ம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தன் திருமணம் முடிந்த பிறகு மணமகளுடன் ஆம்புலன்சில் ஏறி ஊர்வலமாக சென்றதால் அந்த வாகனம் பறிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.

 

இவருக்கு திருமணம் நடந்து முடிந்த கையுடன் மணமகளை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்து சென்றார். வாகனத்தின் முன் பகுதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. மணமகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற பொழுது சைரன் ஒலிக்க செய்யப்பட்டுள்ளது.

 

அவசர விளக்குகளும் எரிய விடப்பட்டுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க மோட்டார் வாகன துறையிடம் மனு அளித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் பறிக்கப்பட்டு ஓட்டுநரின் உரிமம் பறிக்கப்பட்டது.

 

Right Menu Icon