--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கொண்டாட்டம்..!

1

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல், தை பொங்கல் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

 

மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதற்கு மரியாதை செலுத்துவதற்காக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

 

இன்று மாடுகளையும் சுத்தம் செய்யும் விவசாயிகள் மாடுகளின் கூரான கொம்பில் வர்ணம் பூசி, சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். மேலும் தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி மாடுகளுக்கு பொங்கல், பழம் என அனைத்தையும் கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து வைப்பார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon