மநீம புதிய மாநில, மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
மநீம-க்கு புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளை கமல் நியமித்துள்ளார். ஆதிதிராவிடர் அணி மாநில செயலாளராக சிவா, மகளிர் அணி மாநிலச் செயலாளர்களாக முகாம்பிகா ரத்தினம், சினேகா மோகன், பத்மாவதி, கலையரசி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செயலாளர்களாக தனபாலன் (அம்பத்தூர்), பாலமுருகன் (வேளச்சேரி), பாஸ்கர் (கும்மிடிபூண்டி), சீனுவாசன் (எழும்பூர்), அப்துல் முசாபர் (தி.கேணி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




