--- --:--:-- --

” புட்ட பொம்மா ” பாடல் நிகழ்த்திய புதிய சாதனை..!

8

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலாவைகந்த புரோமுலோ படத்தின் புட்ட பொம்மா பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அலாவைகந்த புரோமுலோ படத்தில் இடம்பெற்றிருந்த ஆறு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

 

அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுனின் துள்ளல் நடனம் உருவான புட்ட பொம்மா பாடல் தெலுங்கில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. இது குறித்து அந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். புட்ட பொம்மா பாடலை 26 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

 

உலகம் முழுவதும் பிரபலமான இந்த பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடுபவருமான டேவிட் வார்னர் மனைவி குழந்தையுடன் இணைந்து நடனம் ஆடியது சமீபத்தில் வெளியானது. புட்டபொம்மா பாடலில் நடன சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆடிய பூஜாவும் இந்த சாதனை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஜனவரி மாதம் வெளியான அலாவைகந்த புரோமுலோ திரைப்படம் மூலம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon