--- --:--:-- --

பள்ளிக்கல்வித்துறையில் தேர்வுத்துறை ஆலோசகர் என்ற புதிய பதவி

dpi_710x400xt

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வுத் துறை ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு ஆலோசகராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் உத்தரவில் 3 ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை சார்ந்து மற்ற பாடத்திட்டங்களுக்கு இணையாகவும், தேசிய அளவிலான போட்டி தேர்வில் தயாராகும் வகையிலும் வினாத்தாள்களை உருவாக்கும் அவசியம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

 

அதற்கு தேர்வு துறையிலும், பாடத்திட்டத்திலும் நேரடி அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியின் ஆலோசனை அவசியம் என்பதால் பள்ளிக்கல்வி துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் வகையில் தேர்வுத் துறை ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர் வசுந்தரா தேவி அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Right Menu Icon