குடும்ப அட்டைதாரர்களுக்கான புதிய முக்கிய அறிவிப்பு..!
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வங்கி கணக்கை வைத்திருப்போரிடம் பாஸ் புத்தகத்தின் நகல், அதில் குடும்ப தலைவர் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்தனர். தற்பொழுது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் குடும்பத்தாரர்களை சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.





