--- --:--:-- --

அமேசானில் 2,000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள புதிய வசதி..!

3

திரும்பப் பெறப்பட்டு வரும் 2000 ரூபாய் நோட்டுக்களை அமேசானில் மாற்றிக் கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது.

 

பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அமேசான் பே கேஷ் அமைப்பை பயன்படுத்தி கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் டெலிவரி செய்யும் நபர் வீட்டிற்கு வந்தவுடன் டெபாசிட் செய்ய விரும்பும் தொகைக்காக 2.000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவர் அதனை பெற்றுக் கொண்டு அவர்களது அமேசான் கணக்கில் டெபாசிட் செய்து விடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 

ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் அமேசான் பே கேஷ் அமைப்பில் டெபாசிட் செய்து அதனை ஆன்லைன் பர்சேஸ் முறையில் ஸ்கேனிங் பே முறையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon