--- --:--:-- --

கேரளாவில் புதிய கொரொனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

7

கேரளாவில் புதிய கொரொனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அந்த மாநிலசட்டப்பேரவையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி ஒரு பகுதியில் ஆயிரத்தில் 10 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால் மும்மடங்கு ஊரடங்கு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ஞாயிறன்று மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் கடைகளில் வேலை நேரம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது.

 

ஓணம் மற்றும் சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் அந்த இரு நாட்களில் முழு கூட்டம் இருக்காது என அறிவித்துள்ளார். பொது நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருமணம் மற்றும் இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

வழிபாட்டுத் தலங்களில் அதிகபட்சமாக 40 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்த அவர் இதுவரையிலும் 56 சதவீதத்தினர் நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon