ராமராஜ் காட்டனின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு..!
வேலைவாய்ப்பில் தெலுங்கர்களுக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட ராமராஜ் காட்டனுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வேஷ்டி தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் விளங்கி வருகிறது.
திருப்பூர் மற்றும் மதுரையில் உள்ள தங்கள் நிறுவனத்தின் கிளையில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக ராம்ராஜ் அறிவிப்பு வெளியிட்டது. அதில் தெலுங்கு தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தமிழர்கள் ராம்ராஜ் காட்டனின் உற்பத்தி பொருட்களை நிராகரிக்குமாறு தமிழ் ஹேஸ்டெக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.





