--- --:--:-- --

வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவரை துன்புறுத்தும் அக்கம் பக்கத்தினர்

5

மத்தியபிரதேசத்தில் கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு பகுதியை சேர்ந்த தீபக் சர்மா கடந்த மாதம் 18ஆம் தேதி இவருக்கு கொரொனா அறிகுறிகள் தென்பட்டது. இதனால் மருத்துவமனையை அணுகி அவருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது.

 

பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வீடு திரும்பினார். பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக இவரையும் இவரது குடும்பத்தையும் அக்கம்பக்கத்தினர் துன்புறுத்தியதாக தெரிகிறது.

 

அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க விடாமல் அந்த பகுதி மக்கள் தடுப்பதாகவும் காவல்துறையில் இளைஞர் புகார் அளித்தார். இருப்பினும் துன்புறுத்தல் தொடர்ந்ததால் இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் தனது வீட்டை விட்டு வேறு பகுதிக்கு குடியேற முடிவு செய்துள்ளார்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள், பேருந்துகளில் தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் பெருக்கல் குறி ஒட்டப்பட்டுள்ளன. அந்த இருக்கையில் அமர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதைப்போன்றே விமானத்தில் ஏற அதன் படிக்கட்டுகளில் பயணிகள் காத்திருக்கும் போது இரண்டு படிக்கட்டு விட்டு ஒருவர் நிற்கும் வகையில் எண்கள் இடப்பட்டு தனிமனித இடைவெளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் விமான சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon