--- --:--:-- --

10 வயது சிறுமியை கத்தியால் தாக்கிய பக்கத்து வீட்டு நபர்..!

10

திருச்செங்கோடு சக்தி நாயக்கன்பாளையத்தில் கத்தியால் தாக்கப்பட்டு சேலம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி தஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் உடற் கூறாய்வுக்காக அவரது உடலை எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் தடுத்து தர்ணா செய்தனர்.

 

கடந்த மாதம் 27ஆம் தேதி செந்தில்குமார் என்பவர் தனது வீட்டில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தஷ்மிதாவை தனியாக அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாக தாக்கினார். செந்தில்குமாரும், அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி தஷ்மிதா உயிரிழந்தார்.

 

செந்தில்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வாக்கு வாதம் செய்த உறவினர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

 

Right Menu Icon