--- --:--:-- --

அதிபர் டிரம்புக்கு கொரொனா மறு பரிசோதனையில் நெகட்டிவ்..!

11.1

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்ததாக வெள்ளை மாளிகை முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கடந்த 2ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேரி லேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அதிபர் தற்போது பரப்புரைக்கு திரும்பியுள்ளார்.

 

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு அவர் கொரொனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இரண்டாவது முறையாக அதிபர் டிரம்புக்கு அதிவிரைவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தகவல் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon