நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை..!
நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதையடுத்து பாக். திருப்பித் தாக்கினால் அதை எதிர்கொள்ள மக்களை தயாராக்கும் வகையில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1971-ல் போரின்போது இதே ஒத்திகை நடத்தப்பட்டது. அதையடுத்து தற்போது அதேபோன்ற ஒத்திகை நடத்தப்படவுள்ளது.



