--- --:--:-- --

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்..!

8

டிகர் விவேக் மரணம் குறித்து மத்திய சுகாதாரத் துறை விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

 

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விவேக் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி காலமானார். அதற்கு முன்பு அவர் தடுப்பூசி செலுத்தி இருந்த நிலையில் அவரது உயிர் இழப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

 

தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கும் நடிகர் விவேக் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்த புகாரில் நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட போது விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

 

மேலும் விவேக் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அவரது புகார் மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon