நாதக நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்..!
நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை வெளிப்படுத்தியுள்ள அவர், தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது.
தன் இஷ்டப்படியே செயல்படுவேன் என சீமான் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.





