விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள நாசா உதவி
விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அவர்களுடன் நாசா ஆய்வாளர்களும் களமிறங்கியிருக்கிறார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. தரையிறங்குவதற்கு சிறிது தூரமே இருந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டர் உடன் தொடர்புகளை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விக்ரம் நிலவில் தரையிறங்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நாசா தாங்களும் இந்த பணியில் கைகோர்க்க தயார் என தெரிவித்தது இதற்காக இஸ்ரோ ஒப்புதலைப் பெற்று விக்ரம் லாண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி கலிபோர்னியா,ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களில் உள்ள ஆய்வு நிலையங்களிலிருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற செய்தியை நாசா தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது. நாசாவுக்கு சொந்தமான லேசர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் லண்டனிலிருந்து ஏதேனும் தகவல் வருமா என நாசா விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.





