சித்ராவுடன் நடித்த சக நடிகர்-நடிகைகளுடன் இன்று விசாரணை..!
தற்கொலை செய்து உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ராவுடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் நண்பர்களிடம் விசாரணை நடத்த கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சித்ராவின் தந்தை காமராஜர், தாயார் விஜயா, சகோதரி சரஸ்வதி. சகோதரன் சரவணன் ஆகியோரிடம் கடந்த 14ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தந்தை ரவிச்சந்திரன் தாயார் வசந்தா ஆகியோருடன் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து வரும் சக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை மேற்கொள்ள ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் பட்டியலை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனை வைத்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டதை காவல்துறை பாதுகாப்போடு அழைத்துவந்து இன்று காலை 11 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.







