மியான்மரில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது..!
மியான்மரில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக பாதைக்கு திரும்பாவிட்டால் மியான்மர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்கள் விருப்பத்திற்கு மாறாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள இயலாது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் நாட்டில் நடைபெற்ற ஜனநாயக ரீதியான தேர்தல் முடிவுகள் தெரிய எதிராக செயல்படுவதற்கு ராணுவத்திற்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா என்றும் ஜனநாயகத்தை காக்க துணை நிற்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள சட்ட விரோத ஆட்சி மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஆங்செங் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.






