மறைந்த தந்தைக்கு சிலிக்கான் சிலை வைத்த இளைய சகோதரி..!
மறைந்த தந்தையின் தத்ரூப சிலிகான் சிலையை இளைய சகோதரியின் திருமணத்தன்று மூத்த சகோதரிகள் கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் முதல் இரண்டு மகள்களின் திருமணங்களை சிறப்பாக நடத்திய நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு காலமானார்.
மூன்றாவது மகளின் திருமணத்தின் போது தங்களது தந்தை இல்லாத குறையை போக்க மூத்த மகள் இருவரும் 6 லட்ச ரூபாய் செலவில் தந்தையின் சிலையை வடிவமைத்து இளைய சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தாயாரிடம் ஆசி பெற்றது நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.






