பெண்களை அடிக்க ஓங்கும் ஆணின் கை உடைக்கப்படும் என எம்பி ஆவேசம்..!
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கையை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சரத் பவார் மகளும் எம்பியுமான சுப்ரியா ஆவேசமாக பேசியுள்ளார்.
அண்மையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பயணத்தின்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சரத் பவாரின் மகளும், எம்பியுமான சுக்ரியா அந்த பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் பெண் மீது தாக்குதல் நடத்த எந்த ஆணாவது தன் கைகளை ஓங்கினால் அந்த ஆண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.
மேலும் தாக்குதல் நடத்த ஓங்கும் அந்த ஆணின் கைகளை உடைத்து அந்த ஆணிடமே கொடுத்துவிடுவேன் எனவும் ஆவேசமாக பேசினார்.






