டெல்லி துணை நிலை ஆளுநர் ராஜினாமா..!
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் பதவி மிகவும் முக்கியமானது. ஏனெனில் டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதால் துணைநிலை ஆளுநரை மத்திய அரசு மாநிலங்களுக்கு நியமிக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர் இருந்தாலும் பெரும்பாலான அதிகாரங்கள் துணைநிலை ஆளுநரிடம் உள்ளன. குறிப்பாக டெல்லி போலீஸ் நிர்வாகம், நிலம் சம்பந்தப்பட்ட முடிவுகள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கின்றன.






