மாற்றுத்திறனாளி பள்ளியில் மாணவிக்கு சூடு..!
சென்னை பெரம்பூரில் ஒன்றாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு வைத்ததாக தனியார் பள்ளி மீது காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சூடு வைத்ததாக தனியார் பள்ளி மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திவ்யா என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் 6 வயது மாணவி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று வழக்கம் போல் சிறுமியை பள்ளியில் இருந்து அழைத்து சென்ற பொழுது கையில் சூடு வைத்ததை பார்த்துள்ளனர். பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.






