10 மாத ஆண் குழந்தையை ரூ.85 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!
சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு சென்னையை சேர்ந்த குழந்தைகள் ஆந்திராவில் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் விசாரித்தபோது அந்த மாநிலத்தில் நவநீதம் என்ற பெண் சென்னையில் இருந்து ஒரு ஆண் குழந்தையை எட்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கி வளர்த்து வந்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் அவரை மீட்டு சென்னையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செங்குன்றம் காவல்துறையினர் குழந்தையை விலைக்கு வாங்குவதற்கு வந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் விஜயலட்சுமி தனது 10 மாத ஆண் குழந்தையை கடந்த ஜூலை மாதம் பெண் தரகரிடம் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அவர் ஆந்திராவில் உள்ள நபருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை விற்ற தாய் மற்றும் தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.





