--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு

02

விஜய் சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட பிரச்னையால் விஜய் சங்கீதா தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவரம் கடந்த பிப்ரவரி மாதம்தான் தெரியவந்தது.

 

ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கின் விசாரணை நடைபெற்றபோது விஜய், சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மே மாதம் 19 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதியான இன்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் முதல்வர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

 

முந்தைய விசாரணையின்போது, இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பியதுடன், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகாத நிலையில், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் விஜய், சங்கீதா ஆகிய இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் அவர்கள் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இன்றைய விசாரணை நடந்தது.

 

இன்றைய விசாரணையில் வழக்கை நீதிபதி சுஜாதா வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, விசாரணைக்கு விஜய் மற்றும் சங்கீதா காணொளி காட்சி மூலமாக ஆஜராக மனு தாக்கல் செய்த நிலையில் இன்றைய அமர்வில் நீதிபதி இருவரது மெயில் ஐடி மன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததின் பேரில் வழக்கு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

அதேபோல், சங்கீதா தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்ததால் இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்திலும் வழக்கு சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுரை செய்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon