--- --:--:-- --

கேம் விளையாடுவதை கண்டித்த தாய்..! சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

14

கோவை அருகே செல்போனில் வீடியோகேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்த செல்வகுமார் – லட்சுமி தம்பதியினரின் 12 வயது மகனான ராதாகிருஷ்ணன் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

 

வீட்டில் எப்போதும் செல்போனில் வீடியோகேம் விளையாடியதால் அவனை தாயார் நேற்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படுக்கை அறைக்கு சென்ற அவன் நீண்ட நேரமாக திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon