--- --:--:-- --

6 மாதங்களாக பூட்டிய வீட்டில் பிராணிகளுடன் இருந்த தாய் மற்றும் மகன்..!

1

புதுச்சேரியில் பிராணிகளுடன் ஆறு மாதங்களாக பூட்டிய வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது 12 வயது மகனை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த அரசு ஊழியரான சசிகலா கணவரை பிரிந்து தனது 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வெளியே வராமல் தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதாக அவனது கணவர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து சசிகலா வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு குழுவினர் பிராணிகளுடன் இருந்த தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கணவரை பிரிந்து வாழ்வதால் அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon