ரூ.20 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல்..!
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள கடற்கரை வழியாக இலங்கைக்கு ஐஸ் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய உணவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மண்டப பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட பொழுது எம்ஜிஆர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனை கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் நாககுமார், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐஸ் போதை பொருளை இலங்கைக்கு கடத்தியிருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் போதை பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் 20 கோடி ரூபாயாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து போதை பொருள் மட்டும் இன்றி விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும் கடத்தப்படுகின்றன. பதிலுக்கு அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுகிறது.





