--- --:--:-- --

18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..!

3

18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.

 

சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 2,165 பேரும், மகாராஷ்டிராவில் 1,118 பேரும், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக ஆம்போடெரிசம் பி யின் ஒன்பது லட்சம் குப்பிகளை மத்திய அரசு இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதில் ஐம்பதாயிரம் குப்பிகள் வந்துள்ளதாகவும் அடுத்த 7 நாட்களில் சுமார் 3 லட்சம் குப்பிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கொரொனா நோயாளிகளுக்கு முடிந்தவரை ஸ்டெராய்டு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon