--- --:--:-- --

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாளை முதல் தடை..?

4

த்திய அரசு ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாமல் உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு இரு தினங்களில் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் செய்திகள் வாயிலாகவும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலமாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் கூறப்படுவதுடன் வெறுப்புணர்வை தூண்டும் பொய்யான பிரச்சாரங்கள் வன்முறைகள் தூண்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இது போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு ஒழுங்குமுறை விதிகளை வகுத்தது.

 

ஒடிடி எனப்படும் ஆன்லைனில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் நெட்பிளிக்ஸ் அமேசான் போன்ற தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகள் மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் அதற்கான முடிவடைய உள்ளது.

 

இருப்பினும் புதிய விதிமுறைகளை பெரும்பான்மையான சமூக ஊடகங்கள் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. கட்டுப்படாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஃபேஸ்புக் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon