வீடுகளுக்குள் புகுந்த 100 க்கும் மேற்பட்ட குரங்குகள்..!
இந்தோனேசியாவின் ஒரே நேரத்தில் 100 க்கும் அதிகமான குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை நொறுக்கினர். ஜாவா தீவில் உள்ள இடத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு அந்த பகுதி பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் உணவின்றி குரங்குகள் தவித்து வந்தனர். இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமான குரங்குகள் திடீரென ஊருக்குள் புகுந்த வீடுகளில் புகுந்து நொறுக்கினர். சமையலறைக்குள் புகுந்து குரங்குகள் உணவுப் பொருட்களை அள்ளிச் சென்றன.
இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.







