--- --:--:-- --

மீண்டும் ஸ்டாலின் கிளம்பீட்டாரு! 8ம் தேதி முதல் தீவிர பிரசாரம்!!

stalin 05

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 6ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை 8 ஆம் தேதி தொடங்குகிறது.

 

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அதிமுக சார்பில் முதல்வர் பழனிச்சாமி, திமுக தரப்பில் அதன் தலைவர் ஸ்டாலின் ஆகியோர், பல மாவட்டங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இடையில் தேர்தல் அட்டவணை வெளியானதால், தற்போது அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகளும் தொகுதியை பகிர்ந்து கொள்வதிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை பாமகவுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 5-ம் தேதிக்குள் முடித்து இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மார்ச் 7-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அன்றைய தினம் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று தெரிகிறது.

 

அதை தொடர்ந்து மார்ச் 8ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், தனது 6ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, வரும் 8ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அடுத்த நாள் 9ம் தேதி திண்டுக்கல், மதுரையில் வாக்கு சேகரிக்கிறார். அதை தொடர்ந்து ,மார்ச் 11ஆம் தேதி தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon