--- --:--:-- --

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன- இஸ்ரேல் ராணுவம்

4

ரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக ‘அல் ஜசீரா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அச்சுறுத்தல்களை இடைமறித்து அழிப்பதற்கான தற்காப்பு அமைப்புகள் (Defense systems) தற்போது செயல்பட்டு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களின் மொபைல் போன்களுக்கு நேரடியாகப் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon