--- --:--:-- --

வலிப்பு ஏற்பட்டவருக்கு உதவிய அமைச்சர் செங்கோட்டையன்..!

11

லிப்பு மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன், காமராஜ் ஆகியோர் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அதற்கான உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் செய்தார்.

 

இதேபோல் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியில் விபத்தில் காயமடைந்த நபருக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உதவி செய்தார். தேவையான நிதி உதவி அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon