--- --:--:-- --

விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இந்திய அளவில் சாதனை..!

12

டிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.நடப்பாண்டில் அதிக லைக்குகள், ரி ட்வீட்டுகள் அதிக கோட்களை பெற்ற பதிவுகளை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதிக ரீ ட்வீட்டுகளை பெற்ற பதிவு என்ற பெருமையை விஜய்யின் நெய்வேலி செல்பி பெற்றுள்ளது.

 

சுமார் 1.45 லட்சம் பயனர்கள் இந்த செல்பி போட்டோவை ரீட்வீட் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அங்கு கூடியிருந்த பிரம்மாண்ட ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார் .

 

படப்பிடிப்பு தளத்தில் பேருந்து ஒன்றின் மீது ஏறிய விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட அப்போது வருமான வரித்துறை சோதனைகள் விஜய்யின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களை நடைபெற்ற நிலையில் இந்த செல்ஃபி பதிவு விண்ணை தொட்டது.

 

மாஸ்டர் படத்தில் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை காட்டிலும் இந்த செல்ஃபி ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தது.

Leave a Reply

Right Menu Icon