ஊரடங்கு உத்தரவை மீறிய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்!
ஆஸ்திரேலியாவில் தடை உத்தரவை மீறி கடற்கரைக்கு சுற்றுலா சென்ற அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலக அளவிலான கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு களையும் பயண கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளன.
அந்த வகையில் கட்டுப்படுத்த கடற்கரைகள் மூடப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. தடையை மீறி அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி கடற்கரைக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அமைச்சர் டார்வினுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.தான் தடையை மீறிவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.







