--- --:--:-- --
சாமிநாதன்

வெள்ளகோவில் பகுதியில் வாக்குப்பதிவு மாதிரியை காண்பித்து அமைச்சர் சாமிநாதன் வாக்கு சேகரித்தார்.

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகராட்சிப் பகுதிகளில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

மக்கள் வெள்ளத்தில் அமைச்சர்

வெள்ளகோவில் நகராட்சியின் முக்கியப் பகுதிகளான ஸ்ரீராம் நகர், நடேசன் நகர், அம்மன்கோவில் தெரு, கச்சேரிவலசு, இந்திரா நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து வெங்கமேடு, ரெட்டிவலசு, எம்.ஜி.ஆர் நகர், சலவையாளர் குடியிருப்பு மற்றும் அறிவொளி நகர் என மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

 

samynathan
வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சாமிநாதன்

ஒவ்வொரு பகுதியிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் அமைச்சரை வரவேற்றனர். குறிப்பாக சலவையாளர் குடியிருப்பு மற்றும் அறிவொளி நகர் பகுதிகளில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நகரப் பகுதிகளைத் தொடர்ந்து, நகராட்சி எல்லைக்குள் வரும் தண்ணீர்பந்தல், அரியாண்டிவலசு, கணபதிபாளையம், ஓரம்புப்பாளையம் மற்றும் சு.க. வலசு ஆகிய கிராமப்புறப் பகுதிகளிலும் அமைச்சர் சாமிநாதன் வாக்கு சேகரித்தார். விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில், திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அவர் பேசினார்.


திமுகவின் வாக்குறுதிகள்

பிரச்சாரத்தின் போது அமைச்சர் பேசுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டினார். தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் தங்குதடையின்றி உரிமைத் தொகை ரூ.2,000 கிடைப்பது உறுதி செய்யப்படும். மாணவர்களின் உயர்கல்விக்கான திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார்.

அமைச்சர் சாமிநாதனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அமைச்சரின் இந்தச் சூறாவளிப் பயணம், காங்கேயம் தொகுதியில் அவரது வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon