--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு..!

02

மிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, முக்கியமாக காவிரி விவகாரம் மற்றும் மேகதாது பிரச்சனை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

 

 

முன்னதாக, விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அமைச்சர்களைச் சந்தித்து காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட விவசாய நலன் சார்ந்த கோரிக்கைகளை எடுத்துரைத்திருந்தனர். அந்த சந்திப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலன் சார்ந்த விவகாரங்களில் தமிழக அரசு உரிய மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

 

 

இதனைத் தொடர்ந்து, தற்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்துள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் போது, மேகதாது அணை விவகாரத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், பயிர்க்கடன்களால் சிறு மற்றும் குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

 

அதேவேளையில், அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரணி திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon