அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி..!
சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கும் என ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசு ஊழியர்களில் 70 சதவீதமும் முந்தைய பருவத்தில் இருந்து 30 சதவீதமும் மதிப்பெண் கணக்கிட்டுக் கொள்ள அறிவுறுத்தியது. அந்த வகையில் மதிப்பெண் வழங்கப்படும் போது அரியர் வைக்காத மாணவர்களைவிட அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நடத்திய ஆலோசனையில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 3 கல்லூரி மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.
நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







