--- --:--:-- --

ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான கோழிகள்..!

5

சிலி நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த மில்லியன் கணக்கான கோழிகள் கொன்று அழிக்கப்பட்டன. அந்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு கடல் வாழ் உயிரினங்களுக்கும் பரவி கடல் சிங்கங்கள், நீர் நாய்கள் போன்றவை உயிரிழந்தன.

 

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கோழிகள் கொல்லப்பட்டதால் சிலி நாட்டில் முட்டை விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பறவை காய்ச்சல் ஆனது பறவைகள் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவக்கூடும். ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவாது என சிலி நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon