கிராம நிர்வாக அலுவலர் கொலை : இபிஎஸ் கண்டனம்
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரி பட்டு பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடப்பதை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் தொடர்ந்து சுட்டி காட்டி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எச்சரிக்கும் போதெல்லாம் இந்த அரசு மக்கள் மீதும், அரசு மீதும் அதிகாரிகள் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிக்கே இந்த நிலை என்ன என்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு என வினவியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதே போல டிடிவி தினகரன், கிராம நிர்வாக அலுவலர் கொலைக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.





