மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்று முதல் டோக்கன் விநியோகம்..!
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் புயல் நிவாரண நிதிக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான டோக்கன் வரும் 16ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 17-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 6000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





