குடியரசு தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ சேவை தொடக்கம்..!
குடியரசு தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு டெல்லி மெட்ரோ சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகள் எடுத்துரைக்கும் முறையே அணி வகுப்பு நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என காலை ஆறு மணி வரை இடையில் இயங்கும் என்றும் காலை ஆறு மணிக்கு பிறகு வழக்கமான அட்டவணையுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





