சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய மகள்.. தாய் அளித்த புகார்..!
சங்கரன்கோவில் அருகே வீட்டில் இருந்த நகையை தனது மகள் திருடியதாக தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். சங்கரன்கோவிலில் வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா.
இவரது வீட்டில் பீரோவில இருந்த நகையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜெயாவின் மகள் நகையை எடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வீட்டிலிருந்து நகையை திருடிய மகள் மீது தாய் காவல் நிலையத்திற்கு புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





