இராமநாதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்த மீனவனின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்றுக் கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் !
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் சிந்தாஸ் வயது 45, பாம்பன் மீனவர் மனோன் வயது 45 ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது உயிரிழந்தனர்.இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்றம் உறுப்பினர்
Dr.M.மணிகண்டனை சந்தித்து நிதி உதவி கேட்டு மனு அளித்தனர்.

அவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் நிதி அளித்து குழந்தைகள் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார். குடும்பத்தினர்கள் அளித்த மனு மீது முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.





